தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, ஆளுநர் ரவியை சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். "அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.