120/80 மற்றும் 139/89க்கு இடைப்பட்ட ரத்த அழுத்தம் முன் உயர் ரத்த அழுத்தம் என கூறப்படுகிறது. இதை தடுக்க சில வழிகள் உள்ளன. அதன்படி, எண்ணெய் உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, தினமும் உடற்பயிற்சி செய்வது மற்றும் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக மது மற்றும் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். குறைந்தது ஏழு மணிநேரமாவது தூங்க வேண்டும். மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்து, யோகா, தியானம் செய்ய வேண்டும்.