ஸ்டென்ட் வைத்த பின்னரும் சிலருக்கு மாரடைப்புக்கு ஏற்படுகிறது. இதை தவிர்க்க சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். முறையான உணவுப்பழக்கம், மருத்துவரின் அறிவுரைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும். கார்போஹைட்ரேட்டை குறைத்து பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு, எண்ணெயில் வறுத்த, பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், உப்பு நிறைந்த உணவுகளை கைவிட வேண்டும்.