வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் வழங்கியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 185க்கும் மேலாக உயர்ந்துள்ளது. வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி கிராமங்களில் தோண்ட தோண்ட சடலங்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (ஜூலை 30) அதிகாலை தொடங்கப்பட்ட மீட்பு பணிகள் இன்று 2ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.