ரஷ்யாவில் இன்று (டிச.21) அதிகாலை ட்ரோன்கள் மூலம் உக்ரைன் வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் பல வீடுகளில் தீவிபத்து ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. கடந்த டிசசம்பர் 20 ஆம் தேதி இரவு உக்ரைனின் தலைநகரான கிவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதை தொடந்து, உக்ரைன் இந்த பதில் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.