கிறிஸ்துமஸ் முதல் நாள், 'விஜில்' என்னும் உண்ணா நோன்பு இருப்பவர்களின் வயிற்றுக்கு இதமாக, எளிதில் செரிக்கக் கூடியதாகவும் இருந்த 'ஓட்ஸ்மீல்' கஞ்சிதான் அன்றைய கிறிஸ்துமஸ் கேக்கின் ஆரம்பம். கடந்த, 16-ம் நூற்றாண்டில் உயர்தர மக்கள் இல்லங்களில், 'ஓட்ஸ்' க்குப் பதிலாக கோதுமை மாவும், உலர்ந்த பழங்கள், வெண்ணெய், முட்டை, பருப்பு வகைகள் சேர்த்து, 'கேக்' செய்தனர். இது தான் கிறிஸ்துமஸ் கேக்கின் தொடக்க புள்ளி ஆகும்.