கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து 6 பேர் பலி

59பார்த்தது
கர்நாடகா: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் இருந்து துமகூரு நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார் மீது கன்டெய்னர் லாரி திடீரென கவிழ்ந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இக்கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி