கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடு , உறவினர்கள், குடும்பத்தினர் என பலவற்றை இழந்து தவிக்கின்றனர். இதன் பாதிப்புகளை பிரதமர் மோடி நேரடியாக தற்போது ஆய்வு செய்து வரும் நிலையில், இப்படியொரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை எப்போதும் தேசிய பேரிடர் என்ற ஒன்று அறிவிக்கப்பட்டதில்லை.