எஸ்பிஐ-ல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களிடம் இருந்து ரூ.236 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிதியாண்டு முடிவடைவதால், ஏடிஎம் கார்டு ஆண்டு கட்டணத்தை வசூலிப்பதற்காக இந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ கிளாசிக், சில்வர், குளோபல் கார்டுகளுக்கான ஆண்டு கட்டணம் ரூ.200 ஆகும். இந்த பரிவர்த்தனைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதன்படி, 18 சதவீதம் என்றால் ரூ36 வரி. இதனால், மொத்தம் ரூ.236 கணக்கில் இருந்து எடுக்கப்படுகிறது.