விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (அக். 2) உளுந்தூர்பேட்டையில், திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. மாநாடு நடைபெறுவதையொட்டி நெடுஞ்சாலையில் கட்சியின் கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டுள்ளன. அப்படி நடப்பட்ட கொடிகளை தெரு ஓரத்தில் வீசிய மர்ம நபர்கள் 100-க்கும் மேற்பட்ட இரும்பு பைப்புகளை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை திருட்டு கும்பலை தேடுகிறது.