குவாரியை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு

69பார்த்தது
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கிழக்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி, டி. கடம்பன்குளம் மக்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் அளித்தனர் காரியாபட்டி ஆவியூரில் வெடிவிபத்து ஏற்பட்ட குவாரியை குவாரியை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது. இந்த கல்குவாரி மக்கள் வாழும் கிராமத்திற்கு மிக அருகில் இருப்பதால் வெடி மருந்து வெடிப்பதன் மூலம் நில அதிர்வு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைகின்றன. நில அதிர்வு ஏற்பட்டு பாதிப்படைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மீறி குவாரியை திறந்தால் டி. கடமங்குளம், கீழ உப்பலிக்குண்டு, கே. புதுார் மக்கள் மீண்டும் பாதிக்கப்படுவர். மக்கள் நலன் கருதி இந்த கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும், என கேட்டுள்ளனர்.

டேக்ஸ் :