17 வயது சிறுவனை தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் அய்யனார் நகர் பகுதியைச் சார்ந்தவர் ராஜா முகமது. இவருடைய பேரன் அப்துல் சாதிக் (வயது 17). ராஜா முகமதுவிற்கும் அதே பகுதியை சார்ந்த முத்துப்பாண்டி இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும் இதை மனதில் வைத்துக்கொண்ட முத்துப்பாண்டி ராஜா முகமதின் பேரன் அப்துல் சாதிக்கை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அப்துல் சாதிக் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.