பல்வேறு திட்டங்கள் குறித்து ஆட்சித்தலைவர்பார்வையிட்டு ஆய்வு

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் வேளாண்மை பொறியியல் துறைச் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டத்தின் கீழ் ரூ. 11 இலட்சம் முழு மானியத்தில் மேற்கூரையில் சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்பட்டு, மின்சார உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் மாந்தோப்பு கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 2 இலட்சம் மதிப்பில் பெருமாள் கோவில் ஊரணி மற்றும் மாயத்தேவன் ஊரணி தூர்வாரப்பட்டு, சீரமைக்கப்பட்டு வரும் பணிகளையும், எஸ். கல்லுப்பட்டி கிராமத்;தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 1 இலட்சம் மதிப்பில் அம்மன் கோவில் ஊரணி தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டு வரும் பணிகளையும் கம்பிக்குடி கிராமத்தில், பிரதம மந்திரியின் சூரிய ஒளித் திட்டத்தின் கீழ் ரூ. 2. 54 இலட்சம் மானியத்தின் மூலம் அமைக்கப்பட்ட சூரிய ஒளி சக்தியால் இயங்கும் மின் மோட்டாரினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளியிடம் அதன் பயன்கள் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி