டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த வந்த ஹீராலால் சர்மா (46) மற்றும் அவரது நான்கு மகள்களான நீத்து(26), நிக்கி(24), நீரு(23), நிதி(20) ஆகியோர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஹீராலாலின் மனைவி கடந்தாண்டு உயிரிழந்துள்ளார். மேலும், அவரது இரு மகள்கள் மாற்றுத்திறனாளிகள். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹீராலால் 4 மகள்களையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.