மழைக்காலத்தில் மலேரியா, டெங்கு, டைபாய்டு, உணவு விஷமாக மாறுவது, வயிற்றுப்போக்கு, வைட்டமின் டி குறைபாடு போன்றவை அதிகரிக்கும். இந்த சமயத்தில் சமச்சீரான உணவு வகைகளை உட்கொள்வது நல்ல பலன் தரும். மழைக்காலங்களில் நீர்நிலைகள் மாசுபடுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. அதனால் கடல் உணவுகளையும், வெளி உணவுகளையும் கூடுமானவரை தவிர்த்துவிடுவது நல்லது. காய்கறிகளை வெகுநாட்கள் ப்ரிட்ஜில் வைத்து விட்டு சமைக்க வேண்டாம்.