மே.வ. மாநிலம் டாகிமரி பகுதியில் மின்கம்பி அறுந்து கிடந்த தண்ணீருக்குள் இறங்கிய மாடு அலறிய நிலையில், அதனை காப்பாற்ற மிதுன் (30) என்பவர் சென்றுள்ளார். மிதுனை காப்பாற்ற அவரின் தந்தை சென்றுள்ளார். இதையடுத்து, இருவரையும் காப்பாற்ற மிதுனின் தாய், மிதுனின் 2 வயது குழந்தையுடன் சென்ற நிலையில், அனைவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது. அந்நேரம் வெளியே சென்று உயிர் தப்பியுள்ள மிதுனின் மனைவி குடும்பத்தை இழந்து தவித்து வருகிறார்.