புதுச்சேரியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவரிடம் இன்ஸ்டாகிராமில் பழகிய 15 நாட்களில், யூடியூபர் சிக்கந்தர் ஷா என்ற யூடியூபர் என்பவரது மகன் அஷ்ரப் அலி (24) ஆபாச படங்களை அனுப்பி, நிர்வாண வீடியோ காலுக்கு வரச்சொல்லி தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி, அவரது தாயாரிடம் கூறியதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அஷ்ரப் அலி கைது செய்யப்பட்டார். மேலும், அவரது தந்தை சிக்கந்தர் ஷா மற்றும் சித்தி ரவுடி பேபி சூர்யா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.