தவெக தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (டிச. 11) கலந்து கொண்டார். அங்கு பல்வேறு பத்திரிக்கையாளர்கள் குவிந்தனர். அவர்களிடம் பேட்டி கொடுப்பதாக கூறிய ஆனந்த் மேடையில் சென்று பேசுவதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மேடையை நோக்கி நடந்து சென்றனர். அப்போது திடீரென பவுன்சர்கள் உதவியுடன் அவர் காரில் ஏறி புறப்பட்டார்.