குழந்தைகள் தொடர்ந்து கேம் விளையாடினால் அவர்களின் படிப்பு உள்ளிட்ட அன்றாட செயல்கள் பாதிக்கப்படுகிறது. தூக்கமின்மை, சோர்வு, முதுகு, கழுத்து வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். காரணம் இல்லாமல் கோபப்படுவது, பொய் சொல்லுவது, போன்ற செயல்களில் ஈடுபடுவர். ஆன்லைன் விளையாட்டு மூலம் தேவையில்லாத நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வர். மேலும் பெருவிரல் வீங்கும் 'Video Games Thumb' என்கிற பாதிப்புக்கும் ஆளாகின்றனர்.