உத்தரபிரதேச மாநிலம் மீராட்டை சேர்ந்த ராஜூ - சீமா தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சீமா இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதில் ஆர்வமாக இருப்பார் எனக்கூறப்படுகிறது. இதனிடையே இவரின் ரீல்ஸ் வீடியோவை பார்த்து அடிக்கடி தெரியாத நபர்களிடமிருந்து சீமாவிற்கு அழைப்பு வந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று எழுந்த தகராறில் சீமாவை செங்கல்லால் அடித்து கழுத்தை அறுத்து ராஜூ கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் ராஜூவை தேடி வருகின்றனர்.