குஜராத்தின் சோட்டா உதய்பூர் என்னும் இடத்தில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று, சாலையோர உணவகத்தில் புகுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் அந்த உணவகத்தில் சிலர் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து மூடப்பட்டிருந்த துணியை கிழித்துக்கொண்டு அந்த கடைக்குள் புகுந்தது. அப்போது ஒருவர் சுதாரித்துக்கொண்டு நூழிலையில் உயிர் தப்பினார். எனினும் இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.