விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து தபால் நிலையம் முன்பு நகர காங்கிரஸ் கட்சி தலைவர் அய்யப்பன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்ணில் கருப்பு துணியை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.