விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சார்ந்தவர் கவிதா வயது 30. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை அடகு வைத்து பணம் பெற்று முழு தொகையும் கட்டி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பாண்டியராஜ் முனியராஜ் மற்றும் இரண்டு ஊழியர்கள் தொடர்ந்து தரக்குறைவாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கூடிய திருச்சுழி காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்துள்ளார் புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்