தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் தகுதியுடைய விடுபட்ட பெண்களும் விரைவில் அத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு ரூ.1,000 வழங்கப்படும் எனவும் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால், மகளிர் உரிமைத் தொகை கோரி பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், இதுவரை 50 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.