வடக்கு உள் கர்நாடகா முதல் தென்தமிழகம் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, சென்னை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இரவு 9 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.