முனைவர் ராஜ் கௌதமன் மறைவு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ் ஆய்வறிஞரும் தலித்திய சிந்தனையாளருமான பேராசிரியர் ராஜ்கௌதமன் மறைந்தார் என்ற செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவு தமிழ் ஆய்வுலகுக்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவருக்கு கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். தனிப்பட்ட முறையில் என்னோடு இணக்கமான நல்லுறவைப் பேணி வந்தவர். அவரது மறைவு ஈடுசெய்ய இயலாததாகும்” என குறிப்பிட்டுள்ளார்.