ஸ்ரீவில்லபுத்தூரில் வனத்துறை சார்பாக காலநிலை மாற்றம் குறித்த, பத்திரிக்கையாளர்கள் மற்றும்ஊடகவியலாளர்களுக்கு ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம்.
விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வனத்துறை விரிவாக்க அலுவலகத்தில் மாவட்ட காலநிலை மாற்ற இயக்ககம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து
காலநிலை மாற்றம் குறித்த பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் தேவாரம் தலைமையில்
நடைபெற்றது. இக்கருத்தரங்கில் காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் தகவல்களை, கடல்சார் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பிரியதர்ஷினி கூறும் போது,
ஊடகவியலாளர்கள், காலநிலை அறிவியல் பற்றிய அடிப்படை புரிதல் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தீவிர பருவகால நிகழ்வுகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றும், சுற்றுச்சூழல் பற்றிய செய்திகளுக்கும் இடையே உள்ள மாற்றத்தை தெரிந்து கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும். மேலும் செய்திகளை அறிவியல் தரக்கூடிய மொழியை புரிந்து கொண்டு மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமென்றும் காலநிலை மாற்றத்தில் சரியான அறிவியல் தகவல்களை தர வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமையாகும் என்றார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்