அடுத்த உலகப் போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி வேலரி அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே தொடங்கிய போர், தற்போது வட கொரியா, ஈரான், சீனா, அமெரிக்கா என பெரு நாடுகளின் தலையீட்டால் மூன்றாவது உலகப் போராக மாறியிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். உக்ரைனுக்கு உதவுமாறும் அவர் மற்ற நாடுகளுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.