விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. பாமாயில் 15 கிலோ கடந்த வாரம் ரூ. 2185 என விற்பனையானது. இந்த வாரம் ரூ. 10 குறைந்துள்ளது. எனவே, ரூ. 2175க்கு விற்கப்படுகிறது. முண்டு வத்தல் புதுசு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 19 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ. 1000 உயர்ந்துள்ளது.
எனவே, ரூ. 19 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு 100 கிலோ நயம் ரூ. 10, 30010,300 முதல் ரூ. 10, 90010,900 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ. 800 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ. 11, 10011,100 முதல் ரூ. 11, 50011,500 வரை விற்கப்படுகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலாகிலோ ரூ. 9500 க்கு விற்ற நிலையில் ரூ. 100 குறைந்து தற்போது ரூ. 9400க்கு விற்பனையாகிறது. வெள்ளை பட்டாணி பருப்பு புதுசு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ. 3950 முதல் ரூ. 4, 2004,200 வரை விற்றது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ. 450 வரை உயர்ந்துள்ளது. எனவே, மூட்டை ரூ. 4, 4004,400 முதல் 4, 6004,600 வரை விற்கப்படுகிறது. பாசிப் பயறு லையன் மீடியம் வகை 100 கிலோ ரூ. 9300க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ. 400 வரை குறைந்துள்ளது. எனவே ரூ. 8, 9008,900 முதல் 10 ஆயிரம்ரூ. 9,900 வரை விற்பனை செய்யப்படுகிறது.