கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்ணாடி பூவே பாடல் வெளியாகி சோஷியல் மீடியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 2வது பாடல் விரைவில் வெளியாகும் என்றும், அது வித்தியாசமாக இருக்கும் என்றும் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.