மின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மின் கட்டண உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி மாதமாதம் மின் கட்டணம் கணக்கிடப்பட வேண்டும் எனவும் மாதம் மின் கட்டண வசூல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கண்ணன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது