சிவகாசி: தவெக சார்பாக மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம்...

78பார்த்தது
சிவகாசியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நடைபெற்ற மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உலக மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிவகாசி தேரடி வீதியிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்க ஊர்வலத்தில் தற்காப்பு கலைகளான சிலம்பாட்டம், வாள் வீச்சு, கத்திசண்டை, மான்கொம்பு சண்டை சுருள் வாள் சுழற்றுதல், வேல் கம்பு வீச்சு போன்ற தமிழர்களின் பாரம்பரிய வீர சாகச நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் நேரடி செயல் விளக்கமாக செய்து காண்பித்து அசத்தினர். அதனைத் தொடர்ந்து நகரின் முக்கிய சாலைகளில் கட்சி கொடியை கையிலேந்தி பேரணியாக சென்ற தவெக கட்சியை சேர்ந்த மகளிர் உள்ளிட்டோர் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தியும், போதைப் பொருட்கள் ஒழிப்பை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை முழக்கங்களாக எழுப்பிய படி நடை பயணமாக சென்று பேருந்து நிலையம் முன்பாக நிறைவு செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி