2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்விற்கு நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்.டி.ஏ. வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற வலைதளம் வழியாக இன்று (மார்ச்.09) முதல் 11-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ, 011 40759000 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம்.