துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். ரோஹித் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். மறுமுனையில், சுப்மன் கில் 11 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், 11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 65/0 ரன்கள் அடித்துள்ளது.