அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபுவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிய இபிஎஸ் சேகர்பாபுவின் பெயரை குறிப்பிடாமல், "உங்கள் தொகுதிகள் ஒரு அமைச்சர் உள்ளார், அவர் எப்படி செயல்படுகிறார் என்று பாருங்கள். திமுக அமைச்சர்களைப் போன்று, கட்சி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்" என அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.