நெல்சன் திலீப்குமார், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் 'ஜெயிலர் 2' படம் தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 'ஜெயிலர் 2' படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் எனவும் எஸ்.ஜே. சூர்யா அல்லது செம்பன் வினோத் ஜோஸ் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு பணிகள் நாளை சென்னையில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளி்யாகியுள்ளது.