சிவகாசி: இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரத்தி நடிகர்

4691பார்த்தது
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பா. ஜ. க சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் காலை சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுக்கிர வார்பட்டி, செங்கமல நாச்சியார்புரம், வெள்ளையாபுரம், நமஸ்கரித்தான்பட்டி, வடப்பட்டி, நாகலாபுரம், நடுவப்பட்டி, வேண்டுராயபுரம், துரைச்சாமிபுரம், ஆகிய பகுதியில் திறந்த வேனில் சென்று தீவிர பிரசாரத் தில் ஈடுபட்டனர்.

அப்போது நடுவப்பட்டியில் இருந்து கிருஷ்ணபேரி கிராமத்திற்கு பிரசார வேன் செல்ல முயன்றது. அப்போது திடீரென சரத்குமார் ஒரு மோட்டார் சைக்களில் ஏறி கிருஷ்ணபேரிக்கு செல்ல முயன்றார். அப்போது அதே மோட்டார் சைக்களில் நடிகை ராதிகாவும் பின்னால் அமர்ந்து சென்றார்.

நடுவப்பட்டியில் இருந்து கிருஷ்ணபேரி செல்லும் வழிநெடுகிலும் சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் கிருஷ்ணபேரி கிராமத்தில் சரத்குமாரும், ராதிகாவும் பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டனர்.

வீடியோவில், சரத்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லை. மேலும் அவர் தலைகவசம் அணியவில்லை, ஒரு நட்சத்திர பிரபலமே இப்படி விதிகளை மீறலாமா என சமூகவலதைளத்தில் நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.