தென்னிந்திய மொழிகளில் சிறப்பான திரைப்படங்கள் வருகின்றன என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பெருமிதத்துடன் கூறியுள்ளார். தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர், "தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தற்போது சர்வேதச தரத்துக்கு சிறப்பான திரைப்படங்கள் வருகின்றன. இந்திய சினிமவை மேலும் மேம்படுத்தி உலக அளவில் எடுத்து செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.