பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வு மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை அக்.15-ம் தேதிக்குள் எமிஸ் வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.