விருதுநகர் மாவட்டம். சிவகாசியில் ஏப். 6 நேற்று இரவு பெய்த கனமழையால் பங்குனி திருவிழா நடைபெறும் மாரியம்மன் கோவில் வளாகத்தில் வெள்ளப்பெருக்கு.
சிவகாசியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று இரவு முழுவதும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். இதனிடையே சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக பெய்த கனமழையின் காரணமாக கோவில் வளாகத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழைநீருடன் கழிவு நீர் சேர்ந்து கோவில் வளாகத்திற்குள் முழங்கால் அளவிற்கு பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்த நிலையில், சில மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது.