சிவகாசி: நவராத்திரி திருவிழா கொலுவுடன் ஆரம்பம்....

80பார்த்தது
சிவகாசி சிவன் கோவிலில் 'நவராத்திரி' திருவிழா கொலு ஆரம்பம்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இன்று நவராத்திரி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. நவராாத்திரி திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீவிசாலாட்சி அம்மன் சன்னதி முன்பு பிரமாண்டமான கொலு கண்காட்சி தொடங்கியது. கொலு கண்காட்சியில் பக்தர்கள் வழங்கிய சுவாமி சிலைகள், பறவை மற்றும் விலங்கு பொம்மைகள் என ஆயிரக்கணக்கான பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை பக்தர்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வமாக கண்டு ரசித்து வருகின்றனர். நவராத்திரி திருவிழாவின் முதல்நாளான இன்று 'மகேஸ்வரி' அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இரவில் பூஜைகள் நிறைவு பெற்ற பின்பு பக்தர்கள் அனைவருக்கும் நவராத்திரி பிரசாதங்கள் வழங்கப்படும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி