சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய கண்தான இருவார விழா.
விருதுநகர் மாவட்டம்.
சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் இணை இயக்குனர் டாக்டர் பாபுஜி ஆலோசனைப்படி
தேசிய கண் தான இரு வார விழா இறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தலைமை மருத்துவர் டாக்டர் அய்யனார் தலைமை தாங்க, கண் மருத்துவர் பிரியதர்ஷினி முன்னிலை வைக்கி செவிலியர் கண்காணிப்பாளர்கள் காளியம்மாள், பச்சையம்மாள், தமிழரசி ஆகியோர் வரவேற்க,
சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவமனை கண் மருத்துவர்கள் டாக்டர்சுபாஷினி, டாக்டர். சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு பேசும் போது இறந்த பின் கண்தானம் செய்வதால் கருவிழி பாதிப்பு அடைந்த கண்பார்வையற்ற நான்கு பேருக்கு பார்வை கிடைக்க வாய்ப்புள்ளது, ஆகவே கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில் தற்போது இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் கண் தானம் சிறப்புடன் செயல்பட்டு பார்வை இழப்பை தடுப்பது முன்னணியில் இருக்கிறது கண் தான விழிப்புணர்வு பற்றி பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் கண் தானம் மற்றும் உடல் தானம் செய்த சிவகாசியை சேர்ந்த குருசாமியை தலைமை மருத்துவர் அய்யனார் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலியர்கள் மகாலட்சுமி, சங்கரேஸ்வரி, முத்துலட்சுமி, சுமதி, ராஜலட்சுமி, மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் முடிவில் சீனியர் கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.