சிவகாசி: வீட்டை அலங்கரித்த கொலு பொம்மைகள்...

75பார்த்தது
சிவகாசியில் வீடு, கோயில்களில் களைகட்டும் நவராத்திரி விழா
கொலு பொம்மைகள் வைத்து பெண்கள் வழிபாடு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, திருத்தங்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வீடுகளில் கொலு பொம்மைகளை அலங்கரித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை கொலு வைத்து வழிபடும் சிறப்பு நிகழ்வாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்களில் துர்கை அம்மனையும், அடுத்த 3 நாட்களில் லட்சுமி தேவியையும், இறுதி 3 நாட்களில் சரஸ்வதி தேவியையும் வழிபடுவார்கள். இவ்விழாவை முன்னிட்டு சிவகாசி சிவன் , முருகன் கோயில், பேச்சியம்மன் கோயில், மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில், திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் உட்பட ஏராளமான கோயில்களிலும் ஏராளமான வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு வழிபாடு தொடங்கியுள்ளது.
வீடுகளில் விதவிதமான விநாயகர் சிலை, மீனாட்சி கல்யாணம், அஷ்டலட்சுமி, குபேர வழிபாடு, விவசாயத்தை தத்ரூபமாகவும், இயற்கை காய்கறி, காவிரி ஆறு பிறப்பிடம், வலையில் மீன் பிடிப்பது, இரும்பு கொல்லு பட்டறை, பெண்கள் கதிர் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு பொம்மைகளை வைத்தல் நவராத்திரியின் விசேஷஅம்சமாகும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும், ஒன்பது விதமாக அம்பிகையை பூஜித்து வழிபட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி