சிவகாசி: அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. 20 பேர் காயம்..

71பார்த்தது
சிவகாசி அருகே அரசு விரைவு பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம்,
கோவையிலிருந்து விருதுநகர், சிவகாசி, வழியாக கோவில்பட்டி நோக்கி 30 பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சிவகாசி அருகே உள்ள வச்சக்காரப்பட்டி தேசிய நெடுஞ்சாலையின் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதிய பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவம் அறிந்தது சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் 20 பேர் காயமடைந்த நிலையில். 4 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பேருந்து ஓட்டுநர் முருக பூபதி தூக்க கலக்கத்தில் பேருந்தை இயக்கியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி