அமைச்சர் பதவியில் இருந்து விடுவியுங்கள் - சுரேஷ் கோபி கோரிக்கை

72பார்த்தது
அமைச்சர் பதவியில் இருந்து விடுவியுங்கள் - சுரேஷ் கோபி கோரிக்கை
பிரதமர் மோடியுடன் 72 அமைச்சர்கள் நேற்று (ஜூன் 9) பதவியேற்றுக் கொண்டனர். இதில் கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு பாஜக எம்.பியான சுரேஷ் கோபி இணை அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில் தற்போது பேட்டியளித்துள்ள அவர், ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லித்தான் இணை அமைச்சராக பதவியேற்றேன். படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். அமைச்சர் பதவி வேண்டாம் என தலைமையிடம் கூறியுள்ளேன். விரைவில் என்னை விடுவிப்பார்கள் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.