சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்

74பார்த்தது
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்ணில் இருந்து பூமிக்கு திரும்புவது மேலும் தாமதமாகியுள்ளது. போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களின் பயணம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா ஜூன் 26ஆம் தேதி அவர்கள் திரும்பும் பயணத்தை திட்டமிட்டது. ஆனால் மீண்டும் தரையிறக்கம் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் அவை எப்போது பூமிக்கு வரும் என்பது குறித்து நாசா இன்னும் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி