அம்மா உணவகங்கள் அகற்றம்? - நீதிமன்றம் உத்தரவு

63பார்த்தது
அம்மா உணவகங்கள் அகற்றம்? - நீதிமன்றம் உத்தரவு
சென்னை அசோக் நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளின் சாலையோர நடைபாதைகளில் ஆங்காங்கே அம்மா உணவகங்கள், மின்வாரிய பெட்டிகள், பொது கழிப்பிடங்களை அமைக்கப்பட்டுள்ளன. இவைகள், நடைபாதைகளில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், அவற்றை அகற்ற கோரியும் வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்த விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, “இந்த வழக்கு குறித்து மாநகராட்சி நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்” என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி