தேனீக்கள் கொட்டியதில் 25 பேர் காயம்

77பார்த்தது
தேனீக்கள் கொட்டியதில் 25 பேர் காயம்
சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் தானிப்பட்டி விலக்கு என்ற இடத்தில் உள்ள அல்அமீர் தனியார் கல்வியியல் கல்லூரியில் செய்முறைத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. செய்முறைத் தேர்வு என்பதால் குடும்ப உறுப்பினரும் உடன் வந்திருந்தனர். அப்போது அவ்வளாகத்தில் தேனீக்கள் கட்டியிருந்த கூட்டிலிருந்து தேனீக்கள் திடீரென கலைந்து அருகிலிருந்தவர்களை கொட்ட ஆரம்பித்துள்ளது. 7 மாதக்குழந்தை உள்ளிட்ட 25 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்தூறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்புப்பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் சதீஷ் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி