சிவகாசி: ரோடு ஷோவில் கலக்கிய முன்னாள் அமைச்சர்...

78பார்த்தது
சிவகாசியில், முன்னாள் அமைச்சர் தலைமையில் பிரமாண்ட 'ரோடு ஷோ' ஊர்வலம்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை நிறைவடைந்தது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவு கேட்டு இறுதி கட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் பிரமாண்டமான 'ரோடு ஷோ' பிரச்சார ஊர்வலம் நடைபெற்றது. வேட்பாளர் விஜயபிரபாகரன், அவரது சகோதரர் சண்முகப்பாண்டியன் உட்பட தேமுதிக கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர். சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட 'ரோடு ஷோ' ஊர்வலம், கவிதா சந்திப்பு சாலை, புது ரோடு சாலை, அம்பேத்கர்
சிலை வழியாக சிவன் கோவில் வரையில் நடைபெற்றது. ஊர்வலத்தில் அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி