சிவகாசி: தொழிலதிபர் வெட்டி படுகொலை; போலீஸ் தீவிரம்

2626பார்த்தது
விருதுநகர் மாவட்டம்சிவகாசி அருகே திருத்தங்கலில் தொழிலதிபர் வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியைச் சேர்ந்த பாண்டி மகன் கருப்பசாமி(33). இவரது மனைவி பாண்டிச்செல்வி(29). இவர்களுக்கு கனிமொழி (7), ஜான்சி (4) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். கருப்பசாமி சொந்தமாக ஜேசிபி வைத்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று (06.06.2024) இரவு முத்துமாரியம்மன் காலனியில் உள்ள ஸ்ரீசக்தி விநாயகர் கோயில் அருகே கருப்பசாமியை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.

தகவலறிந்து வந்த சிவகாசி கிழக்கு போலீஸார், கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் டிஎஸ்பி சுப்பையா நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கருப்பசாமிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த வேறு சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் பகையை வைத்து கருப்பசாமி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி